” நாட்டை நீண்டகாலத்துக்கு மூடிவைப்பதென்பது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும். எனவே, நாட்டை மீண்டும் திறக்கும்போது மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.” – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
” கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தி நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு சுகாதார தரப்பினர், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் முன்கள பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். எனவே, நாட்டு மக்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.










