தேர்தலை பிற்போடும் அரசின் சூழ்ச்சித் திட்டத்துக்கு துணை நிற்கும் நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சகல விதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று சுதந்திர மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” இந்நாட்டில் ஜனநாயகம் இல்லாது செய்யப்பட்டுள்ளது. போராட்டம் இல்லை, ஆர்ப்பாட்டங்கள்கூட நடத்துவதற்கு அனுமதி இல்லை. இந்நிலைமை ஆபத்தானது.
தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை எனக்கூறும் அரசு, வேறு நிகழ்வுகளை நடத்தி பணம் செலவளிக்கின்றது. அரசை நடத்துவதற்கு ஒன்றரை நாளுக்கு செலலாகும் பணம்தான் தேர்தலை நடத்த அவசிம். அதனை வழங்கலாம்.
ஆனால் நிதி அமைச்சின் செயலாளர் மறுக்கின்றார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றும் பீரிஸ் குறிப்பிட்டார்.
