பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் நாட்டுக்குத் தேவையான நிதியை பெற்றுக் கொடுப்பதில் நிதி அமைச்சு மிக இக்கட்டான முகாமைத்துவத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கான நிதியை விநியோகிப்பதில் நிதி அமைச்சின் அதிகாரிகள் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஏனைய அனைத்து அமைச்சுக்களின் செலவினங்களை முகாமைத்துவம் செய்வதில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒழுங்குபடுத்தல் மூலம் அந்த செலவினங்களை முகாமைத்துவம் செய்யுமாறு பல்வேறு தரப்புகளும் நிதி அமைச்சின் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
