நிழல் உலக தாதா ‘ஹரக்கட்டா’வின் உதவியாளர் கைது!

டுபாயில் உள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் நதுன் சிந்தக்கவின் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் ஒருவர் பிலியந்தல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

10 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் சம்பாதித்த பணத்துடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலபிட்டிய மற்றும் மாத்தறை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல், கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கெஸ்பேவ நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles