” நிவாரணத்தில் பாரபட்சம்” – எதிர்ப்பு தெரிவித்து தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்!

உலக உணவு பாதுகாப்பு அமைப்பால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள், மோரார் மற்றும் தேரேசிய ஆகிய தோட்டப் பகுதியில் உள்ள மக்களுக்கு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (27) புதன் கிழமை தேரேசியா தோட்ட தேயிலை தொழிட்சாலை முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

” விதவைகள், ஊனமுற்றோர் இருக்கின்றனர். அவர்களுக்குகூட நிவாரணம் வழங்கப்படவில்லை. உலர் உணவு வழங்கும் விடயத்தில் பாரபட்சம் காட்டப்படுகின்றது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 இற்கும் மேட்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விடயம் தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு வினவியபோது,

” உலர் உணவு பொருட்களானது உலக உணவு பாதுகாப்பு திட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பம், சிறுநீரக நோயாளர்கள் , ஊனமுற்றவர்கள், இருதய நோயாளர்கள் ஆகியோருக்கே வழங்கப்படுகின்றது. இதற்கான பெயர் பட்டியல் தனியார் நிறுவனத்தின் ஊடாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெறப்பட்டு , உரியவர்களை கொழும்புக்கு அழைத்து உறுதி படுத்திய பின்னரே உலர் உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றது.” – என்றார்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles