நீதிமன்ற தீர்ப்பு தொழிற்சங்க ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள வெற்றியாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவும், மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோ கொழுந்துக்கு 80 ரூபாவும் வழங்கப்பட வேண்டும் என்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு சகல தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் ஆதரவை வழங்கியிருந்தார்கள்.

முதலாளிமார் சம்மேளனம் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு வழக்குத் தாக்கல் செய்திருந்தது. எனினும் இந்த மனுவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. இது தொழிற்சங்க ஒற்றுமைக்கும், தொழிலாளர்களின் ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றியாகும்.

மேலும், இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக 29 ஆந் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சாதகமாகவே அமைந்து தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles