கடந்த சில மாதங்களாக மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவும் நிலையில் நீர் தேக்க பகுதிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
இதனால் நீர் மின் நிலைய மின்சாரம் உற்பத்தி நிலையங்களுக்கு நீரை வழங்கும் பிரதான நீர் தேக்கமான மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 53 அடி குறைந்த 85 அடி நீரையே உள்ளடக்கி உள்ளது.
நீர் குறைந்து வருவதால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள 54 வருடங்கள் நீரில் மூழ்கிய ஆலயங்கள் மற்றும் புத்த பகவான் சிலைகள் பள்ளி வாயில் மசூதி தற்போது மக்கள் பார்வைக்கு தென் படுகிறது.
இவ்வாறு தென்படும் காலங்களில் உள் நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிகம் இங்கு வருகை தரும் நிலை தோன்றியுள்ளது.
அதன் படி 1917 ம் ஆண்டு கட்டப்பட்ட சண்முக நாதர் ஆலயம் மற்றும் சித்தி விநாயகர் ஆலயம் இஸ்லாமிய பள்ளியின் மசூதி விகாரையில் இருந்த புனித புத்தகப் வானின் சிலை தற்போது மக்கள் சென்று வழிபட முடியும்.
எது எப்படியாயினும் பழைய மஸ்கெலியா நகரில் 1917 ம் ஆண்டு கட்டப்பட்ட சண்முக நாதர் ஆலயம் 54 ஆண்டு காலமாக நீரில் மூழ்கிய நிலையில் இருந்தாலும் தற்போது மிகவும் கம்பீரமான தோற்றம் கொண்ட நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதனைக் பாதுகாக்க வேண்டிய கடமை இலங்கை மின்சார சபைக்கும் தொல் பொருள் ஆராய்ச்சி சபைக்கு உள்ளது.
ஆகவே இந்த அரும் பெரும் கட்டிடங்கள் மற்றும் பெத்த சின்னம் இஸ்லாமிய மசூதி காக்க வேண்டும் என இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்
