நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு, பெரும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு நீண்ட நேரம் – நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்திலும் இந்நிலைமை நீடிக்கின்றது.
அதிகாலை ஐந்து மணி முதல் வரிசையில் காத்திருந்தும் கூட ஒரு சிலரால் எரிவாயுவினைப் பெற்றுக் கொள்ள முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பும் சம்பவங்களும் பதிவாகின்றன.
அத்துடன், ஒரு சிலர் தமது பிரதேசங்களைத் தவிர்த்து மிக நீண்ட தூரம் பயணம் செய்தும் அதிக செலவு செய்தும் எரிவாயு கொள்கலன்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.
இதேவேளை நுவரெலியா மற்றும் நானுஒயாவில் சில உணவகங்கள் எரிவாயு கொள்கலன்கள் இல்லாததன் காரணத்தினால் மூடப்பட்டுள்ளது
டி.சந்ரு
