நுவரெலியாவில் 37 சிறார்களுக்கு கொரோனா தொற்று!

நுவரெலியா ஹாவா – எலிய பகுதியிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் 45 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

37 சிறார்களுக்கும், 8 ஊழியர்களுக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்படி சிறுவர் நிலையத்தில் 8 சிறார்களுக்கு வைரஸ் தொற்று உறுதியாகியிருந்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பிசிஆர் பரிசோதனையின் அடிப்படையிலேயே மேலும் 45 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

தொற்றாளர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டி.சந்ரு

Related Articles

Latest Articles