நாட்டில் மூன்று மாவட்டங்களில் மேலும் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்சினன் கிராம சேவகர் பிரிவில் மத்திய பகுதியும், கண்டி மாவட்டத்தில் சுதும்பொல மேற்கு கிராம சேவகர் பிரிவில் வெலமெத பாரகம பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காரை நகர் கிராம சேவகர் பிரிவில் கல்லித்தெரு பகுதியும், கல்வன் தால்வு பகுதியும் முடக்கப்பட்டுள்ளன.