நுவரெலியா வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சைபெற ஏற்பாடு!

நுவரெலியா மாவட்ட பொது வைத்திசாலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட பொது வைத்திசாலையில் அமைக்கப்பட்டிருந்த கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் பிரிவு உத்தியோக பூர்வமாக இன்று (ஜன 2) திங்கட்கிழமை  நண்பகல் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான மகேந்திர செனவிரட்னவினால் திறந்து வைக்கப்பட்டது.

இவ்வைபவதில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை  விஷேட வைத்திய நிபுணர் ரவி திஸாநாயக்க மற்றும் வைத்தியர்கள் வைத்தியசாலை அதிகாரிகள் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Latest Articles