நோர்வூட் பிரதேசசபையின் கழிவுகளை ஏற்றிச் செல்லும் ட்ரெக்டர் விபத்துக்குள்ளானது

நோர்வூட் பிரதேசசபையின் கழிவுகளை ஏற்றிச் செல்லும் ட்ரெக்டர் விபத்துக்குள்ளானதில் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (5) காலை நோர்வூட் பிரதேசசபை அலுவலகத்திலிருந்து பொகவந்தலாவை நகரை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த ட்ரெக்டரின் முன்பக்க டயர்கள் கழன்று சென்றதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸா​ர் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த சாரதி டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles