பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த பாலாகொல பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் தேடுதல் மேற்கொண்டபோது, இறைச்சிக்காக வெட்டப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ 500 கிராம் மான் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளதோடு 65 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
தனது வீட்டு தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி உயிரிழந்த மானை வெட்டியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளதோடு மான் இறைச்சியையும் சந்தேக நபரையும் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததுள்ளனர். மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா










