பண்டாரவளை பொலிஸாரால் பண்டாரவளை நகரில் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது ஹொரொயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய மூன்று இளைஞர்களும், 30 மற்றும் 37 வயதுகளுடைய மேலும் இரு நபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஹொரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜ்
