பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அரசின் நிலைப்பாடு மாறிவிட்டதா?

” பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் எமது அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிக்கவில்லை. அதனை இல்லாதொழிக்க வேண்டும் என்பதே உறுதியான நிலைப்பாடாகும்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் கடந்த முறையும் கேள்வி எழுப்பட்டது. தற்போது நாடாளுமன்றம் செயற்படவில்லை. எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது, மறுசீரமைப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தின் ஊடாகவே நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். அதனால்தான் தற்போதைய சூழ்நிலையில் நீக்கப்படாது என கூறி இருந்தேன்.

பயங்கரவாத தடைச்சட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும், நீக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. நாடாளுமன்றம் கூடிய பின்னரே அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். எனவே, இது தொடர்பில் தவறான கோணத்தில் கருத்துகளை பரப்ப வேண்டாம். இது விடயத்தில் நாம் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிக்கவில்லை. அன்று இருந்த நிலைப்பாட்டிலேயே இன்றும் உள்ளோம். புதிய நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் முடிவெடுக்கப்படும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles