பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்க சம்பிக்க முயற்சி

மாற்று சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி விளங்கும் என்ற தனது எதிர்பார்ப்புகளை ஐக்கிய மக்கள் சக்தி நிறை வேற்றவில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலும் காணப்பட்ட பலவீனங்கள் காரணமாக மாற்றுசக்தியொன்றிற்கான தேவைகாணப்பட்டது .எனினும் ஐக்கிய மக்கள் சக்தி எனது எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி என்னை கட்சியில் இணைந்துகொள்ளுமாறு அழைத்தது. ஆனால் நான் சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட தீர்மானித்துள்ளேன். ஐக்கிய மக்கள் சக்தி எதிரியில்லை. ஆனால் ஒரு நண்பன் என அவர் தெரிவித்துள்ளார்.

பரந்துபட்ட கூட்டணியை உருவாக்குவது உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால திட்டங்கள் குறித்து எனது 43வது பிரிகேட் உன்னிப்பாக அவதானிக்கும் என தெரிவித்த அவர் நான் அரசாங்கத்தில் இணையமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு வாக்களித்த மக்களின் நன்மதிப்பை ஒருபோதும் வீணடிக்கமாட்டேன் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தங்களின் திட்டத்தை பொருளாதார ரீதியாக ஆதரிக்க அரசு தயாராக இருந்தால், அதற்கு ஆதரவு அளிப்பதாகவும், அதைவிடுத்து அரசாங்கத்தின் நடவடிக்கை மீது கற்களை வீசுவது தமது எதிர்பார்ப்பு இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles