பலாங்கொடை நகரின் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் பல இடங்கள் வெற்றிலைப் பிரியர்களால் அசிங்கப்படுத்தப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
மாடிக்கட்டிடங்கள் பலவற்றை கொண்ட இப்பிரதேசத்தில் பலகட்டடங்கள் சுவர்களிலும் சுவரோரங்களிலும் சுற்றாடலிலும் வெற்றிலை எச்சில் துப்பப்படுவதால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக நகரவாசிகள் பொது கவலை மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுவர்களும் சுற்றுப்புறச் சூழலும் மிகவும் அசுத்தமடைந்து காணப்படுவதாக இவ்விடங்களால் பயணிக்கும் பயணிகளும் இப்பகுதிகளில் வியாபாரங்களை நடத்தி வரும் வர்த்தகர்கள் கடை உரிமையாளர்கள் நகரவாசிகள் செய்கின்றனர்.
மேல் மாடிகளிலிருந்து வெற்றிலை எச்சிலைத் துப்புவதால் சுவர்களும் கட்டட தொகுதிகளும் இவ்வாறு அசுத்தமடைந்துள்ளன.நகருக்கு வரும் பயணிகள் உட்பட இப்பகுதியில் வியாபார நிலையங்களிலில் பணிபுரியும் வெற்றிலைப் பிரியர்களால் இவ்வாறு சுற்றாடல் அசிங்கப்படுத்தப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இங்கு வருகை தரும் பொது மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் உடைகளில் இவை படிந்து அசெளகரியங்களை ஏற்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இலங்கையில் மிகச்சிறந்த நகரமாக பல முறை விருதுகள் பெற்ற பலாங்கொடை நகர சபையின் அழகிய சுற்றாடல் இவ்வாறு பொறுப்பின்றி நாசப்படுத்துவது தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தொடர்ந்து தவறு செய்து வருபவர்களை நவீன சி.சி.டி.வி போன்ற சாதனங்களை பயன்படுத்தி குற்றவாளிகளை கண்டு பிடித்து தண்டனை வழங்க வேண்டுமென சுற்றாடல் சுகாதார நலன் விரும்பிகள் புதிய நகர முதல்வர் எம்.ரீ.எம்.ரூமியிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.










