பலாலி வீதி ஊடான பயண நேரம் நீடிப்பு!

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இரவு 8 மணிவரை யாழ்ப்பாணம் – பலாலி வீதி திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற காணி விடுவிப்புக் கலந்துரையாடலில், 24 மணிநேரமும் பலாலி வீதியைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன் கோரிக்கை விடுத்திருந்தார். அவருடைய கோரிக்கை இராணுவத்தால் நிராகரிக்கப்பட்டது. எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தொடர்ச்சியாக முன்வைத்த வலியுறுத்தலையடுத்து இரவு 8 மணிவரை வீதியைத் திறந்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது காலை 6 மணி தொடக்கம் இரவு 7 மணிவரை பலாலி வீதி பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles