சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேற்படி பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் இடையிலேயே நேற்றிரவு இம்மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 09 மாணவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.










