2029 இல் நாமலே ஜனாதிபதி: மஹிந்த முன்னிலையில் அர்ச்சுனா சூளுரை!

” 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்சதான் ஜனாதிபதி. அவருடன் பேசி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்ற நிகழ்வொன்றில், அவர் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே அர்ச்சுனா இவ்வாறு கூறினார்.

“ சிங்கள மக்கள் நேசிக்கும் ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்சதான். கிராமிய மக்கள் மத்தியில் அவருக்கு இன்னும் ஆதரவு உள்ளது.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles