கொழும்பு பல்கலைக்கழக மாணவியொருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பல்கலைக்கழக மாணவரை ஜனவரி 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டார்.
கொழும்பு குதிரைப்பந்தய திடலில் 24 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவரை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய சந்தர்ப்பத்தில் பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
காதல் விவகாரமே இந்த படுகொலைக்கு காரணமென ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
