பஸிலுக்காகவே அவசரமாக திருத்தப்படுகின்றது ’19’!

அமெரிக்க பிரஜையான பஸில் ராஜபக்சவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்காகவே அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் அவசர அவசரமாக திருத்தப்படுகின்றது – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” ராஜபக்சக்களின்கீழ் 141 அரச நிறுவனங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக்கூட வகிக்காத பஸில் ராஜபக்சவின்கீழ் உத்தியோகப்பூர்வமற்ற ரீதியில் 7 திணைக்களங்கள் உள்ளன. ஜனாதிபதி செயலணி பிரதானியாக அவரே செயற்படுகின்றார்.

இந்நிலையில் அமெரிக்க பிரஜையான பஸில் ராஜபக்சவை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்து பொருளாதாரத்தை இயக்கும் அமைச்சை அவரிடம் ஒப்படைப்பதற்காகவே 19 ஆவது திருத்தச்சட்டம் அவசர அவசரமாக திருத்தப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் எனக்கூறியவர்கள் அவசரமாக 19 ஐ திருத்துவதன் நோக்கமும் இதுதான்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles