இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுகின்ற நிலையில், பஸ் கட்டணமும் குறைக்கப்படலாம் என தெரியவருகின்றது.
எரிபொருள் விலை மாற்றத்தால் பஸ் கட்டண மறுசீரமைப்பை மேற்கொள்ளலாம் என தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், பஸ் கட்டண குறைப்பு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பஸ் கட்டண குறைப்பு எத்தனை சதவீதத்தால் இடம்பெறும் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
