‘பாடசாலை செல்வதாகக் கூறி காதலனுடன் சல்லாபம்’ 13 வயது மாணவி செய்த செயல்

13  வயதான பாடசாலை மாணவியை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 17 வயதான பாடசாலை மாணவனை கைது செய்ததாக மஹவிலச்சிய பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட  மாணவி பாடசாலை செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு 13ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியேறியதாகவும்,  பாடசாலை அதிபர் தொலைபேசி மூலம் மகள் பாடசாலைக்கு வரவில்லையென தாயிடம் தெரிவித்ததை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வீட்டை விட்டு வந்த பாதிக்கப்பட்ட சிறுமி பாடசாலைக்கு அருகில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த காதலனுடன் கைவிடப்பட்டிருந்த வீடொன்றுக்குச் சென்று பாடசாலை சீருடை மாற்றிக் கொண்டுள்ளார். பின்னர் அங்கு வைத்தே காதலனுடன் கணவன் மனைவி போல் நடந்து கொண்டதாக மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பாடசாலை முடியும் நேரத்தில் பாடசாலை சீருடையுடன் பாடசாலைக்கு அருகில் வந்தபோது உறவினரிடம் சிக்கியுள்ளார். கைது செய்யப்பட்ட மாணவனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles