நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.










