பசறை நகரில் பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட வயோதிப பெண்ணொருவர்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். அவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த வயோதிப பெண் பசறை ஆக்கரத்தன்னை பகுதியை சேர்ந்த 82 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது .
லுணுகலை பிரதேசத்தில் இருந்து பதுளை நோக்கி பயணித்த 22 வயதுடைய யுவதியொருவர் செலுத்திய ஸ்கூட்டர் ராக மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு மோதியுள்ளது.
இது தொடர்பில் பசறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
ராமு தனராஜ்
