பாரதியாரின் வறுமையை போக்கிய ’சிட்டுக் குருவிகள்’ – நடந்தது என்ன?

எட்டயபுரத்து முண்டாசு கவிராஜன் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் இன்று (11-12-2020) கொண்டாடப்படுகிறது.

பத்திரிகையாளர்களின் ஆசானும், சமூகப் புரட்சியாளரும், தேசப் பக்தர்களின் முன்னோடியும், கவிஞர்களுக்கெல்லாம் கவிஞனாக விளங்கிய மாபெரும் போராளியான மகாகவி பாரதியார்,  1882ஆம் ஆண்டு இதே நன்னாளில்தான், எட்டயபுரத்தைச் சேர்ந்த சின்னசாமி சுப்ரமணிய ஐயர்- இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

தன் வாழ்நாள் முழுவதும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், பெண் அடிமைத்தனம், ஜாதியக் கொடுமைகள் உட்பட பல அடக்குமுறைகளுக்கு எதிராக, எழுத்துகளால் சாட்டையடி கொடுத்த மாபெரும் எழுத்தாளராக, பாரதியார் திகழ்ந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தனது பேனாவை ஆயுதமாகப் பயன்படுத்திய பத்திரிகையாளர்களில் பாரதியார் முதன்மையானவர். இந்திய பத்திரிகை உலகில் கார்ட்டூனை முதலில் அறிமுகம் செய்தவர். சமூக நலனுக்காகப் பாடுபட விரும்பும் இன்றைய பத்திரிகையாளர்களுக்கு எல்லாம் முன்னோடியான அவரின் பங்களிப்பை வணங்கி போற்றுவோம்.

பாரதியாரின் வறுமையை போக்கிய ’சிட்டுக் குருவிகள்’ – நடந்தது என்ன?

‘விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே’ என்ற பாரதியாரின் வரிகள் மிகவும் பிரபலம். பறவைகளின் சுதந்திரம் குறித்தும் அதனிடம் இருந்து மானிடர்கள் கற்றுக்கொள்ள வேண்டி பாரதிய எழுதிய அந்த வரிகள் இன்று காலம் கடந்து நிற்கிறது. ஆனால் அந்த வரிகள் பின்னால் நடந்த சம்பவம் மிகவும் சுவாரஸ்யமானது. வறுமையின் பிடியில், பசியின் கொடுமையில் பிறந்த புரட்சிகரமான வரிகள் அவை.

பாரதியார் 10 வருடங்கள் புதுச்சேரியில் இருந்தார். அங்கு அவர் இந்தியா என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்தார். அப்போது அந்த பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மண்டயம் சீனிவாச ஆச்சாரியார். இருவரும் சிறந்த நண்பர்கள். அவர்களின் குடும்பத்தினரும் நெருக்கமானவர்கள். சீனிவாச ஆச்சாரியாருக்கு யதுகிரி என்ற மகளும் உண்டு.

10வயது சிறுமியான யதுகிரி பாரதியாருக்கு செல்லப்பிள்ளை. அடிக்கடி தன்னுடைய கவிதைகளையெல்லாம் யதுகிரிக்கு படித்துக் காட்டுவார் பாரதி. 10வயதான யதுகிரி பாரதியாரின் பாடல்களை குறிப்பெடுத்து வைத்துக்கொள்வார். இன்று பெரிய கவியாக கொண்டாடப்படும் பாரதி, அவர் வாழ்ந்த காலத்தில் வறுமையில் இருந்தவர். பசிக்கும் பட்டினிக்கும் இடையேதான் புரட்சிகளை விதைத்தார் பாரதி.

ஒருநாள் மாலை வழக்கம் போல் யதுகிரி, பாரதி வீட்டுக்கு வருகிறார். அப்போது பாரதி வீட்டில் இல்லை. அவரது மனைவி செல்லம்மாள் சோகமாக இருக்கிறார். அவரின் சோகத்தை முகத்தில் பார்த்த யதுகிரி, சிறுமியின் குரல் மாறாமல் ‘என்ன ஆச்சு?’ என கேட்டுவிடுகிறார். மழலையின் அன்பால் நெகிழ்ந்த செல்லம்மாள், அவரிடம் நடந்த கதையை சொல்கிறார். ”நான் பாரதியிடம் சுதேசமித்திரன் பத்திரிகைக்கு கட்டுரை அனுப்ப சொன்னேன். அவர் அனுப்பவே இல்லை. கட்டுரை அனுப்பினால் பணம் வரும்.குடும்ப நிலவரம் அவருக்கு புரியவில்லை. பால் காசு கொடுக்கவில்லை. உணவுப்பொருட்களும் இல்லை எனக் கூறுகிறார்.

பின்னர் சமையலுக்கு இருந்த கொஞ்ச அரிசியை எடுத்து வைத்துவிட்டு, குளிக்கச்சென்றுவிடுகிறார் செல்லம்மாள். திரும்பி வந்து பார்த்தால், முறத்தில் இருந்த அரிசியில் கால்பங்கை காணவில்லை. அருகில் இருந்த பாரதி அரிசியை அள்ளி முற்றத்தில் குருவிகளுக்கு தூவிக்கொண்டு இருக்கிறார். அரிசியைக் கண்ட குருவிகள் கூட்டமாக வந்து கொத்தித் திங்கின்றன. அதனை அருகில் அமர்ந்து ரசித்துக்கொண்டு இருக்கிறார் பாரதி.

அருகில் செல்லமாள் மிகவும் கோவமாக நின்றுகொண்டு இருக்கிறார். அவரைப்பாரத்து பாரதி பேசுகிறார், ”செல்லம்மா.. நாம் கோவப்பட்டு கொள்கிறோம். முகத்தை திருப்பிக்கொள்கிறோம். ஆனால் இந்த சிட்டுக்குருவிகளை பார். எவ்வளவு இணக்கமாக இருக்கின்றன. அன்பாக இருக்கின்றன. கண்கள் திறந்திருந்தும் நாம் இந்த சிட்டுக்குருவிகளை ரசிக்கவில்லை என்றால் நாம்தான் மூடர்கள். இந்த பறவைகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்கிறார்.

இருந்த அரிசியிலும் கொஞ்சம் வீணாய்போய்விட்டதே என்று கோவப்பட்ட செல்லம்மாள், ”உங்களுக்கு பொறுப்பு இல்லை. உண்மை நிலவரம் புரியவில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாதபோது சிட்டுக்குருவி பாடம் முக்கியமா? கட்டுரை அனுப்பினால் பணம் கிடைக்கும். அதை எப்போது செய்வீர்கள்? நமக்கு இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கு. ஆண்டவன் என்னை சோதிக்கிறான்” என புலம்பித் தள்ளுகிறார்.

செல்லம்மாளின் வார்த்தைகளை அரைகுறையாய் காதில் வாங்கிக்கொண்டே தன்னுடைய இளையமகள் சகுந்தலாபாரதியை அழைக்கிறார், பாரதி. அந்த கணத்திலேயே ஒரு பாடலை பாடுகிறார் பாரதி. அதுதான் ‘விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே’ பாடல். பாடலைக் கேட்டு சிறுமி சகுந்தலாபாரதி குஷியாகிவிடுகிறார். பாரதி பாட, சகுந்தா ஆட அந்த இடமே கொண்டாட்ட இடமாக மாறுகிறது. தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த செல்லம்மாளும் இந்த கொண்டாட்டத்துக்குள் ஐக்கியமாகிவிடுகிறார்.

பசியும்,கோவமுமாக இருந்த ஒரு இடம் பாரதியின் ஒரு பாடலுக்கு பின் கொண்டாட்டக்களமாக மாறிவிடுகிறது. இரவில் பாரதி, செல்லம்மாளிடம் சொல்கிறார், ”நீ கவலைபட வேண்டாம் செல்லம்மா. இந்த குருவிப்பாட்டையே நான் பத்திரிகைக்கு அனுப்புகிறேன். பணம் வரும்” என்கிறார். இப்படியாக குருவிகளின் பசிக்கு அரிசியை தூவினார் பாரதி, பதிலுக்கு அந்த குருவிகள் ஒரு பாடலைக் கொடுத்து பாரதியின் வறுமையை போக்க உதவின என்பது வரலாறு.வறுமையிலும், பசியிலும் தமிழை கொண்டாடிய கவிஞன் பாரதி என்பதுக்கு இந்த சம்பவம் பெரிய உதாரணம்.

இந்த சம்பவம் நடந்த போது சிறுமியாக இருந்த யதுகிரி பின்னாளில் ‘பாரதி நினைவுகள்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் இந்த சிட்டுக்குருவி பாடல் உருவான கதை பதிவாகியுள்ளது. சம்பவம் நடந்த அன்று சிறுமி யதுகிரியை அழைத்து தன்னுடைய சிட்டுக்குருவி பாடலை பாடிக்காட்டிய பாரதி கூறினாராம், ”யதுகிரி நீ பார்ப்பாய்.. நான் பார்க்கமாட்டேன்.

என்னுடைய சிறிய பாடல்களும் புகழப்படும். போற்றப்படும், தமிழகம் இன்னும் கண் திறக்கவில்லை. அப்படியே திறந்தாலும் தமிழகம் தற்போது குழந்தை பருவத்தில் இருக்கிறது” என்று கூறுகிறார். இந்த சம்பவத்தை தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள யதுகிரி அம்மையார், பாரதியின் எதிர்கால ஞானத்தை குறிப்பிட்டு மெய்சிலிர்த்துள்ளார்.

பாடல்:

விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியினைப் போலே

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி என்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு…)

பெட்டையோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையில்லாதோர் கூடு கட்டிக் கொண்டு
முட்டை தருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு…)

முற்றத்திலேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு…)

Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles