பால்மா – சீனி விலைகள் குறைப்பு

இலங்கை சதொச சீனி மற்றும் பால்மாவின் விலையைக் குறைத்துள்ளதாகவும் புதிய விலைகள் இன்றுமுதல் (15) அமுலுக்கு வருவதாகவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது.

400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாவினாலும்  ஒரு கிலோகிராம் சீனியின் விலை ரூ. 6 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கேற்ப 400 கிராம் பால்மா பொதியின் புதிய விலை ரூ.1,080 உம் ஒரு கிலோகிராம் சீனியின் குறைக்கப்பட்ட புதிய விலை ரூ.243 எனவும் சதொச அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles