பால்மா விலை மீண்டும் அதிகரிப்பு?

அத்தியாவசியப் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்புக்கேற்ப விலைகளும் அதிகரிக்கப்பட வுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொலர் நெருக்கடி காரணமாக சில இறக்குமதியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனையடுத்து, அடுத்த வாரம் முதல் நாட்டுக்கு வரவிருக்கும் புதிய கையிருப்புக்கள் தொடர்பில் விலை அதிகரிப்பு குறித்து முடிவு செய்யப்படுமென தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles