” பின்லேடன் இறந்துவிட்டார்… ஆனால் குஜராத் கசாப்புக்கடைக்காரர் வாழ்கிறார்.” என்று பிரதமர் மோடியை பாகிஸ்தான் அமைச்சர் விமர்சித்துள்ளமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டம் நேற்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும்’ என்று கூறினார்.
அவருக்கு அவையில் பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒசாமா பின்லேடனுக்கு உறைவிடம் கொடுதவர்கள், அண்டை நாட்டு நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் நம்பகத்தன்மை குறித்து இந்த சபையில் பிரசாரம் செய்ய வேண்டாம்’ என்றார்.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறைஅமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பூட்டோ சர்தர் நேற்று கூறுகையில்,
ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத் கசாப்புக்கடைக்காரர் வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராக (மோடி) உள்ளார். அவர் (பிரதமர் மோடி) இந்த நாட்டிற்குள் (அமெரிக்கா) நுழைய தடைவிதிக்கப்பட்டது. பிரதமரும் (மோடி), வெளியுறவுத்துறை மந்திரியும் (ஜெய்சங்கர்) ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்’ என்றார்.










