பிளாஸ்டிக் மீள்சுழற்சிக்காக இலங்கையின் சுழற்சிமுறை பொருளாதாரத்தை பலப்படுத்துகிறது Eco Spindles

இலங்கையின் மிகப் பெரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான Eco Spindles (Private) Limited, மீள்சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி தனது தையல் நூல் உற்பத்தித் திறனை மேலும் விரிவுபடுத்தவும், உலகின் முன்னணி நாகரீக வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை மீள்சுழற்சி செய்யவும் மற்றும் அதன் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்பு சேகரிப்பில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

மீள்சுழற்சி செய்யப்பட்ட பொலியேதிலீன் டெரெப்தாலேட் (PET) பிளாஸ்டிக்கின் சிறிய துண்டுகளிலிருந்து நேரடியாக பொலியஸ்டர் நூலை உற்பத்தி செய்யும் வசதியுடன், Eco Spindles தற்போது உலகில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் ஒன்றாகும்.
ஏப்ரல் 2022இல் அதன் தையல் நூல் தொழிற்சாலை விரிவாக்கத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நிறுவனம் மீள்சுழற்சி செய்யப்பட்ட பொலியஸ்டர் நூலின் உற்பத்தி திறனை 100 தொன்களில் இருந்து 220 தொன்கள் அல்லது 120%ஆக அதிகரிக்க எதிர்பார்க்கிறது.

இந்த விரிவாக்கத்தின் மூன்றாம் கட்டமாக, Eco Spindles இலங்கையிலோ அல்லது உலகளாவிய ரீதியிலோ தனது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றது.

நிறுவனம் பிரதானமாக மீள்சுழற்சி செய்யப்பட்ட PET பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்வதால், இலங்கைக்கு அதிக ஏற்றுமதி வருமானம் மற்றும் அந்நிய செலாவணியை ஈட்டி இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடிந்துள்ளது.

இது உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் ஒன்றான பிளாஸ்டிக்கை அகற்றுவதையும் வெற்றிகரமாக மேற்கொள்ள உதவுகின்றது.

நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வாகத்தின் பங்கேற்புடன் 14 பெப்ரவரி 2022 அன்று நடைபெற்ற Eco Spindlesஇன் வருடாந்திர Yarn மாநாட்டில் நிறுவனம் விரிவாக்கம் குறித்து அறிவித்தது. மாநாட்டின் போது, Eco Spindles 2021ஆம் ஆண்டின் முதல் பத்து சிறந்த கொள்வனவாளர்களையும் மதிப்பீடு செய்தது.

BPPL ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி அனுஷ் அமரசிங்க, Eco Spindles Yarnsஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி, Nalaka Seneviratne மற்றும் Eco Spindles Yarns சந்தைப்படுத்தல் தலைவர் ஜெரோம் டி மெல் ஆகியோர் மாநாட்டில் முக்கிய உரைகளை ஆற்றினர்.

இங்கு, நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மேலதிகமாக, பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான தற்போதைய போராட்டம் மற்றும் அதன் உலகளாவிய தாக்கத்துடன் நாடு பின்பற்ற வேண்டிய தீர்வுகள் பற்றிய கருத்துக்களையும் அறிவையும் பரிமாறிக் கொண்டனர்.

“சுற்றுச்சூழலை நேசிக்கும் மக்களாகிய நாங்கள், இயற்கையில் பிளாஸ்டிக்கின் தாக்கம் குறித்து ஆழ்ந்த அனுதாபப்படுகின்றோம்.

ஒவ்வொரு ஆண்டும், 583 பில்லியனுக்கும் அதிகமான PET பிளாஸ்டிக் பாட்டில்களை உற்பத்தி செய்யப்படுகிறது, அவற்றில் 85% குப்பைக் கூலங்களுக்கு வீசப்படுகின்றன.

இந்த நெருக்கடிக்கான தீர்வு ஒரு சுழற்சியான பொருளாதார மாதிரியை உருவாக்கி ஆதரிக்க முற்படும் ஒரு சமூக தொழில்முனைவு என்று நாங்கள் நம்புகிறோம்.

Eco Spindles இந்த புரிதலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது மற்றும் இந்த முக்கியமான பணியை அடைவதில் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

எதிர்காலத்தில் அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்.” இதன்போது கருத்துத் தெரிவிக்கையில் கலாநிதி அமரசிங்க தெரிவித்தார்.

தூக்கி எறியப்படும் ஆடைகளைப் பயன்படுத்தி மீள்சுழற்சி செய்யப்பட்ட பொலியஸ்டர் நூல்களை உற்பத்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளமை குறித்து இந்த மாநாட்டின் போது Eco Spindles அறிவித்தது.

இந்த கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துச் செல்ல இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் உலகளாவிய ஆடை வர்த்தகநாமங்களுடன் நிறுவனம் நெருக்கமாக பணியாற்றுகிறது. அதன் முதல் வணிக தயாரிப்பு மே 2022இல் திட்டமிடப்பட்டுள்ளது.

“உலகளவில் கைவிடப்பட்ட ஆடைகளில் 20% மட்டுமே மீள்சுழற்சி செய்யப்படுகின்றன அல்லது மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள 80% எரிக்கப்படுகிறது அல்லது குப்பை கூலங்களில் கொட்டப்படுகிறது.

இலங்கை ஒரு பயனுள்ள ஆடை ஏற்றுமதி நாடாக இருப்பதால், மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவு ஆடைகளை மீள்சுழற்சி செய்வது உள்ளூர் தொழில்துறை மற்றும் அதன் உலகளாவிய வர்த்தக நாமங்கள் மற்றும் விற்பனை பங்காளிகளுக்கு அவர்களின் பேண்தகைமை முயற்சிகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.

மேலும், சுற்றுச்சூழலில் சிதைவதற்கு 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக எடுக்கும் ஒரு PET பாட்டில் பாலியஸ்டர் நூலாக மீள்சுழற்சி செய்யப்படலாம், பின்னர் அது ஆடைகளை தயாரிக்க பயன்படுகிறது.

இந்த மாற்றத்தின் மூலம், பிளாஸ்டிக்கை நாம் பொறுப்புடன் அப்புறப்படுத்தி மீள்சுழற்சி செய்யலாம், அது சிதைவதற்கு எடுக்கும் 900 வருடங்களைக் குறைக்க உதவலாம்.” என நாலக்க செனவிரத்ன தெரிவித்தார்.

Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles