பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடர் கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபரான பிள்ளையான் காணொளித் தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இரு தரப்பு சமர்ப்பணங்களையும் கருத்திற்கொண்ட மட்டக்களப்பு நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
