கொழும்பு, புறக்கோட்டை, நான்காம் குறுக்குத்தெருவிலுள்ள ஆர்.ஜி. ஸ்டோர்ஸ் வர்த்தக நிலையம் சுகாதார அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது.
அதில் பணியாற்றிய நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் வர்த்தக நிலையம் மூடப்பட்டுள்ளது. இதேவேளை, அந்த ஊழியர்களுடன் பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த ஊழியர்களுடன் தொடர்புபட்டவரகள் இருந்தால் தங்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக் கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.