பிரத்தியேக வகுப்பிற்குச் சென்ற தனது மகளை வீட்டுக்கு அழைத்து கொண்டு சென்ற தாயின் கழுத்திலிருந்த ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியினை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துகொண்டு தப்பியோடியுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் கம்பளை, நகரில் மலபார் வீதியில் கோவிலுக்கு அருகில் மக்கள் செறிந்து காணப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இன்று (11) பகல் இடம் பெற்றுள்ளமை அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ சீ டிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கம்பளை நிருபர்
