” பெருந்தோட்டங்களில் வறுமை காரணமாக துன்புறும் மக்கள்மீது சர்வதேச சமூகம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்..” இவ்வாறு எரிக் சொல்ஹெயிம் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நான் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அவரது காலநிலை ஆலோசகராக இங்கே வந்துளேன். இந்த சந்திப்பில், மனோ கணேசன் எனக்கு சமீபத்தில் ஜனாதிபதி நடத்திய சர்வ கட்சி மாநாட்டை பற்றி எடுத்து கூறினார்.
அது நல்லது. இந்நாட்டில் இனப்பிரச்சினை தீர இது நல்ல வேளை. இந்நாட்டில் சிங்கள, வடகிழக்கு தமிழர், முஸ்லிம்களுடன், இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் சமமாக இணைந்து வாழ விரும்புவதை அவர் எனக்கு கூறினார்.
மேலும், பெருந்தோட்டங்களில் வறுமை நிலையில் வாழும் மக்களை பற்றியும் கூறினார். உணவின்மை, வறுமை காரணமாக துன்புறும் அவர்கள் மீது சர்வதேச சமூகம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்.
நண்பர் மனோ கணேசன், தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளையும் இங்கு பேசுகிறார். அது மிகவும் சிறந்தது. அவரது பிறந்த நாளுக்கு எனது வாழ்த்துக்கள். ” – என்றார்.










