பெருந்தோட்ட யாக்க நிர்வாகத்துக்கு பெருந்தோட்ட பகுதி இளைஞர்களை உள்வாங்க நடவடிக்கை!

மக்கள் பெருந்தோட்டயாகத்தின் 48ஆம் ஆண்டு விழா கொழும்பில் அமைந்துள்ள அதன் தலைமை காரியாலத்தில் நடைபெற்றது.

மக்கள் பெருந்தோட்டயாகத்தின் தலைவர் விங் கமாண்டர் புவனக அபேயசூரிய தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வை சிறப்புபடுத்தும் முகமாக நிர்வாகப் பிரிவிற்கு தோட்டப்புறங்களில் கல்வி பயின்று புலமை பெற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான பணிப்புரை விடுத்திருந்தார்.

அதற்கமைய முதல் கட்டமாக ஹந்தான, மவுண்ட்ஜீன், லூல்கந்தூர, ரஹத்துங்கோட, போன்ற தோட்டங்களுக்கு நிர்வாக பிரிவிற்கு இளைஞர், யுவதிகள் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.

இதன்போது கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி

’48 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் மக்கள் பெருந்தோட்டயாகத்திற்கும், அதனை சிறப்புற நடாத்தி செல்லும் தலைவர் அபேயசூரிய மற்றும் பொது முகாமையாளர் பிரதீப், அனைத்து அதிகாரிகளுக்கும் எனது வாழ்த்துக்களை மற்றும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

இந்த 48 வருட பாதையில் இப்பெருந்தோட்டயாகத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்க்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று 390 பில்லியன் பெறுமதியான பொருளாதாரத்தில் பெருந்தோட்டத்துறை காணப்பட்டு வருகிறது. இவ்வளர்ச்சியில் எமது மக்களின் வியர்வை ரத்தம் மற்றும் தியாகங்கள் பல்வேறு வகையில் உந்து சக்தியாக இருந்தது. இருப்பினும், அவர்களுக்கான உரிமைகள் மற்றும் வசதிகள் சரியான முறையில் கிடைக்கப் பெற்றுள்ளதா இன்னும் அவை கேள்விகுறியாகவே உள்ளது.

1948 நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த போது எமது மக்கள் நாடற்றவர்களாக மாற்றப்பட்டனர். 1960களில் எங்களுடைய சொந்தங்கள் பலவந்தமாக. நாடு கடத்தப்பட்டார்கள். 1980ளில் நாட்டில் ஏற்பட்டிருந்த இனக் கலவரங்களினால் மக்களின் வாழ்வாதாரம் மட்டும் அன்றி உயிர்களையும் இழக்க வேண்டியிருந்தது.

1990 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்நாட்டு யுத்தத்திலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலையும் காணப்பட்டது. 2002 ஆண்டு வரை நாம் இலங்கை பிரஜை ஆவதே எமது நோக்கமாக இருந்தது. தற்போது அபிவிருத்தி காலப்பகுதியில் நாம் உள்ளோம் எம் மக்களுக்கு தேவையான வீடமைப்பு மற்றும் காணி உரிமை தொடர்பான அனைத்து திட்டங்களையும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நாங்கள் செய்துவருகிறோம்.

அந்த வகையில் எமது சமூகம் இலங்கையில் ஒரு தனித்துவ அடையாளத்தோடு பொருளாதார சமூக மற்றும் அந்தஸ்தோடு தலைநிமிர்ந்து வாழ வைசொல்லில் மாத்திரமன்றி செயல்படுத்தியும் வருகின்றோம். மக்கள் பெருந்தோட்ட யாக்கத்தில் சேவையாற்றிய பல தொழிலாளர்கள் இன்னும் அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் சேவைக்கால கொடுப்பனவு வழங்கப்படாமல் அவதியுறுகின்றனர்.

கடந்த காலங்களில் பெருந்தோட்டயாகத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்கள் சரியான முறையில் முகாமைத்துவத்தை மேற்றகொள்லாதன் காரணமாக எமது மக்கள் அதற்கான சுமையை தாங்க வேண்டியதாக உள்ளது. தற்போது இந்த கொடுப்பனவுகள் மற்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத்தொகை எமது தொடர் அழுத்தங்கள் காரணமாக சிறிது சிறிதாக வழங்க பட்டாலும் மிகுதி நிலுவை தொகையை துரித கதியில் வழங்க நிதி அமைச்சர் என்ற ரீதியில் நாம் ஜனாதிபதி அவர்களுக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

எந்த ஒரு தொழில்துறையும் வளர்ச்சி பெற அதன் முக்கிய மூலதனமான மனித வளத்துறை மேம்பட வேண்டும். இன்று நியமனங்களை பெரும் இந்த இளைஞர்களும் யுவதிகளும் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்ற வேண்டும். அதுமாத்திரமன்றி இவர்களை போல பலர் இந்த பெருந்தோட்ட கைத்தொழில் துறையை நவீனமயமாக்குவதற்கும் அதனுடனான தொழில்துறை வளர்ச்சிக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பங்குதாரர்களாக ஆகவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles