பெற்றோல் தகராறில் ஒருவர் பலி

பொரளை – காசல் வீதி பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரை மற்றுமொரு நபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் இன்று (25) காலை வேளையில் நடைபெற்றுள்ளது.

காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிளில் இருந்த பெற்றோலை நபர் ஒருவர் திருடியதால் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடைபெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் 29 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

Related Articles

Latest Articles