பெலவத்தையில் உள்ள அவரது மூன்று மாடி குடியிருப்பில் உள்ள குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (7) பிற்பகல் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி குறித்த தொழிலதிபர் தனது இல்லத்தின் நீச்சல் குளத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டார்.
விசாரணைகளை அடுத்து கந்தானை பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கடவத்தையில் வைத்து கைது செய்ததுடன் அவரது மனைவி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (5) கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதான ஆண் மற்றும் 23 வயதுடைய பெண் நாரஹேன்பிட்டியில் வசிப்பவர்கள்.
அவர்கள் முதலில் CCD ஆல் 24 மணிநேரம் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.
