‘பேலியகொடையிலிருந்து ஹாலி – எல ரொசட் தோட்டத்துக்கு தப்பிவந்த கொரோனா தொற்றாளர்’

ஹாலி – எலைப் பகுதியின் ரொசட் பெருந்தோட்டத்திற்கு தப்பியோடிவந்து மறைந்திருந்த கொரோனா தொற்றாளரொருவர், இன்று (24) காலை, பதுளை பொது சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிஸாரினால் பிடிக்கப்பட்டு, ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

ஹாலி- எலைப் பகுதியின் ரொசட் பெருந்தோட்டத்தின் முதலாம் பிரிவிலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தையடுத்து, குறிப்பிட்ட பெருந்தோட்டப் பிரிவிற்கு, வெளியில் எவரும் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் குறிப்பிட்ட கொரோனா தொற்றாளரின் குடும்பத்தினர்களடங்கிய ஆறுபேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதாரவழி முறையிலான பாதுகாப்பு வசதிகளும் இத்தோட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பேலியகொடைமீன் சந்தையில் கடமையாற்றிவந்த இந்நபர்,பி.சி.ஆர். பரிசோதனையின் மூலம் கொரோனாதொற்றாளர் என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருந்துத னிமைப்படுத்தப்பட்டிருந்தார். அத்தினத்தில் இந்நபர் அங்கிருந்துதப்பி, புறக்கோட்டை இ.போ.ச. பஸ் நிலையத்திற்குவந்துள்ளார்.

அப் பஸ் நிலையத்திலிருந்து தலங்கமடிப்போவைச் சேர்ந்த இ.போ.ச. பஸ்சில் இரவு. 12 மணிக்கு புறப்பட்டு,காலை 6 மணிக்கு பதுளை வழியில் ஹாலி-எலைக்கு வந்துள்ளார்.
அங்கு மதுபானம் விற்பனை நிலையமொன்றில் மதுபான வகைகளை எடுத்துக்கொண்ட கொரோனா தொற்றாளர், ரொசட் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோடிவந்த செய்தி, பதுளை சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் ஆகியோருக்குகிடைக்கவே, அவர்கள் விரைந்து குறிப்பிட்ட நபரைப் பிடித்து ,பதுளை அரசினர் மருத்துவமனை விசேட பிரிவுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து ,கொழும்புஐ.டி.எய்ச். மருத்துவமனைக்குஅனுப்பப்பட்டார்.

மேலும், இக் கொரோனாதொற்றாளர் பயணித்த பஸ் பயணிகள்,அவர் தொடர்புகளைமேற்கொண்டிருந்தவர்கள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்துதீவிரபுலன் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பிட்டதொற்றாளர் தோட்டத்தின் தனதுவீட்டிற்குவந்தவுடன் தகவல் கிடைக்கப்பெற்றதுமேபொலிசாரும்,சுகாதாரப் பிரிவினரும் துரிதமாகசெயற்பட்டதினால், தோட்டத்தில் வேறுஎங்கும் செல்லமுடியாதநிலை ஏற்பட்டது. இதனால் ஏற்படவிருந்தபாரிய எதிர்விளைவுகள் தடுக்கப்பட்டன. இத்தொற்றாளர் ஹாலி-எலைநகரில் சென்ற கடையினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எம். செல்வராஜா, பதுளை

Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles