பொகவந்தலாவ பகுதியில் இன்று மாலை பெய்த அடை மழையால் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கெசல்கமுவ ஒயா பெருக்கெடுத்து, பொகவந்தலாவ சென்மேரீஸ் தேசிய பாடசாலையின் இரு வகுப்பறை கட்டிடங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.


அத்துடன், பொகவந்தலாவ கொட்டியாகலைகீழ் பிரிவு தோட்டத்தில் உள்ள ஏழு
குடியிருப்புகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளது.

அப்பகுதியில் உள்ள மரக்கறி செய்கையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் .
வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்










