ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா விரைவில் நீக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
கட்சி தலைவரையும், கட்சியால் எடுக்கப்படும் முடிவுகளையும் பொன்சேகா வெளிப்படையாக விமர்சித்துவரும் நிலையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தவிசாளர் பதவியில் இருந்து பொன்சேகாவை நீக்குமாறு ஐ.ம.சவின் உறுப்பினர்கள் பலரும் கட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சஜித்துக்கும், பொன்சேகாவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்த நிலையில், முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துகொண்டதையடுத்து பிரச்சினை உக்கிரமடைந்து, பொது வெளிக்கு வந்தது.
இந்நிலையில் கட்சியை விட்டு வெளியேறும் திட்டம் இல்லை என பொன்சேகா கூறியுள்ளார். எனினும், அவரிடம் இருந்து தவிசாளர் பதவியை பறிக்க திட்டமிடப்பட்டுள்ளது.










