பொலிஸாரின் மோசமான செயல்களை கண்டிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியம் காரணமாக பொலிஸாரின் அடாவடிகள் தொடர்கின்றன என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

பதாகைகளை வைத்திருந்த பெண்களை துன்புறுத்தியது, பெண் பொஸிஸ் உத்தியோகஸ்தரின் கழுத்தில் கை வைத்து அழுத்தியமை போன்ற சம்பவங்கள் நேற்று இடம்பெற்றன.

இதனை மேற்கோளிட்டு கருத்து வெளியிட்டுள்ள அச்த்தின் தலைவர் சாலிய பீரிஸ், இது அதிகாரத்தில் உள்ளவர்களின் தோல்வியை எடுத்துக்காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அரசாங்கத்தின் மெத்தனப்போக்கினால் பொலிஸாரின் ஈவிரக்கமற்ற தன்மைகள் தொடர்கின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய செய்தி

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது களுத்துறையில் இருந்து காலிமுகத்திடலுக்கு நடை பேரணியாக சென்ற இரு பெண்களை பாணந்துறை கொரகாபொல பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்திருந்தனர்.

குறித்த பெண்களின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு பொலிஸார் இடையூறு விளைவித்த நிலையில், குறித்த பெண்களை கைது செய்ய பல பெண் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது பெண் பொலிஸ் அதிகாரிகளிடம் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது.

உயர் பொலிஸ் அதிகாரியொருவர் பெண் பொலிஸ் அதிகாரியொருவரை கழுத்தினை பிடித்து தள்ளும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles