பொலிஸ்மா அதிபருக்கு பதவி நீடிப்பு – அமைச்சரவை அனுமதி

பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரம ரத்னவின் பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான பத்திரத்தை மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். இந்நிலையிலேயே அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

பொலிஸ் மா அதிபர் சீ.டீ விக்ரமரத்னவுக்கு 60 வயது நிறைவடையும் நிலையில் அவர் கடந்த மார்ச் 26 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் செல்லவிருந்தார்.

அந்த வகையில் அவரது சேவையை மேலும் மூன்று மாத காலங்களுக்கு நீடிக்கவே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கிணங்க அவர் எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு பொலிஸ் மா அதிபர் பதவியை வகிப்பார் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles