போதை பொருட்களுடன் ஹட்டனுக்கு சுற்றுலா வந்த 8 பேர் கைது!

ஹட்டன் பகுதிக்கு வருட இறுதி விடுமுறைக்காக பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளில் , போதைப்பொருட்களுடன் சுற்றுலா வந்த எட்டு பேர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பிராயாணிகள் நுவரெலியா, எல்ல, சிவனொளிபாதமலை, பதுளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகமான சுற்றுலா பிராயாணிகள் புகையிரதங்களின் மூலமே வருகை தருகின்றனர். இதனால் புகையிரதங்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பிராயாணிகள் செல்வதனால் புகையிரதங்களில் நெரிசல் நிலை காணப்படுகின்றன. மலையக பகுதிகளுக்கு போதைப்பொருட்களை கொண்டு வருவதனை தடுக்கும் நோக்கில் ஹட்டன் பொலிஸ் கோட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புகையிரதங்களில் வருபவர்களை ஹட்டன் புகையிரத நிலையத்திலும் வாகனங்களில் வருபவர்களை கினிகத்தேனை கலுகல தியகல உள்ளிட்ட பல பகுதிகளிலும் சோதனைசெய்யப்படுகின்றன. இவ்வாறு சோதனை நடவடிக்கையின் போது நேற்று முன்தினமும் நேற்றும் 08 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த நபர்களிடமிருந்து ஏஸ், கேரளகஞ்சா, மதனமோதனம், மாவா, ஐஸ், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் இவர்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles