” போனால் போகட்டும் – கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை” – சஜித் அணி பதிலடி

” முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் கட்சியில் இருந்து வெளியேறுவதால் எமது கட்சிக்கு எவ்வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

தவறான முடிவை எடுத்து தனது அரசியல் வாழ்வுக்கு ஹரிசன் முடிவை தேடிக்கொண்டுள்ளார் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க போவதாக முன்னாள் அமைச்சர் பி ஹரிசன் நேற்று அறிவிப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles