” இந்த அரசு தேர்தலை ஒத்திவைக்க முற்பட்டால் மக்கள் சக்தியை திரட்டி வீதியில் இறங்குவோம். ” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
அத்துடன், பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலையும் எதிர்க்கட்சித் தலைவர் கண்டித்தார்.










