போரில் களமிறங்கிய அமெரிக்கா: 3 அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதல்!

ஈரானில் உள்ள மூன்று முதன்மை அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“ஈரானில் உள்ள போர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம். இப்போது அனைத்து விமானங்களும் ஈரானின் வான்வெளிக்கு வெளியே உள்ளன.” – என்று தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

‘ உலகில் வேறு எந்த ராணுவமும் இதைச் செய்திருக்க முடியாது. இப்போது அமைதிக்கான நேரம்.” – எனவும் ட்ரம்ப் குறப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல்களை நடத்த 2பி2 பாம்பர் ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா இந்த குண்டுகளை பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

முன்னதாக ஈரானின் இஸ்பஹான் அணு சக்தி தளம் மீது இஸ்ரேல் விமானப் படை நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்களின் தாக்குதலில் ஈரானின் 3 ராணுவ தளபதிகள் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல், ஈரான் இடையே இன்று 10 ஆவது நாளாக போர் நீடிக்கின்றது.

Related Articles

Latest Articles