போர் வெற்றி விழாவை மீண்டும் கையிலெடுக்கும் மஹிந்த!

பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய படைவீரர் நினைவு தினம் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் படை வீரர் நினைவு தினத்தை நடத்தவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நாளை 20 ஆம் திகதி குறித்த நிகழ்வு நடைபெறும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

‘தேசிய படை வீரர் நினைவு தின நிகழ்வில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கட்டாயம் பங்கேற்க வேண்டும். ஜனாதிபதி பங்கேற்கமாட்டார் என எமக்கு தகவல் கிடைத்த பிறகு, படை வீரர் நினைவு தினத்தை மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடத்த அனுமதி கோரினோம். அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

எது எப்படி இருந்தாலும் மே 20 ஆம் திகதி நாம் படையினரை நினைவு கூருவோம். அதற்குரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு படையினர் நினைவு தூபிக்கு முன்பாக நாட்டுக்குரிய எமது கடமை நிறைவேற்றப்படும்.” – எனவும் மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles