மக்களே அவதானம்! கொரோனா ஆபத்து இன்னமும் நீங்கவில்லை!!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துவிட்டாலும், கொவிட் ஆபத்து இன்னும் வீரியமாக உள்ள நிலையில், குறிப்பாக வார இறுதி நாட்களில் மக்களின்நடத்தை முற்றிலும் வேதனை அளிக்கிறது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மக்கள் கொரோனாவின் ஆபத்து மறைந்துவிட்டது போல நடந்து கொள்கிறார்கள் என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்கள் வார இறுதியில் உல்லாசப் பயணங்களை எப்படி அனுபவித்தார்கள் என்பதை நாங்கள் ஊடகங்களில் பார்த்தோம். மக்களிடமிருந்து இது போன்ற பொறுப்பற்ற நடத்தையை மன்னிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மக்கள் இந்த வழியில் தொடர்ந்து செயற்பட்டால், அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனவே, மக்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். கொவிட் -19 க்கு எதிரான போரில் எந்தத் தடையும் ஏற்படக்கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles