தவறவிடப்பட்டிருந்த 75 ஆயிரம் ரூபா பணம், வங்கி அட்டை, தேசிய அடையாய அட்டை ஆகியவற்றை உரிய நபரிடமே மீள கையளித்து, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நேர்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
மடுல்சீமை பகுதியைச் சேர்ந்த இராமசாமி ஹரேராம் என்ற ஆட்டோ ஓட்டுநரே இவ்வாறு செயற்பட்டுள்ளார். அவரை பலரும் பாராட்டியுள்ளனர்.
மடுல்சீமை பகுதியில் 75 ஆயிரம் ரூபா பணம், அடையாள அட்டை, வங்கி ATM அட்டை ஆகியவற்றை நேற்று (25/12) இளைஞர் ஒருவர் தவறவிட்டிருந்தார். இது தொடர்பில் மடுல்சீமை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேற்படி இளைஞரால் தவறவிடப்பட்டிருந்த பணப்பை ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து அடையாள அட்டைமூலம், உரிமையாளரை அடையாளம் கண்டுகொண்ட ஆட்டோ ஓட்டுநர்,அவரை தொடர்புகொண்டு பணம் மற்றும் இதர ஆவணங்களை கையளித்துள்ளார்.
இப்படியான நபர்களும் நம் சமூகத்தில் வாழ்கின்றனர். அவர்களை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
நடராஜா மலர்வேந்தன்











